படப்பிடிப்பு தளத்தில் விஜய்க்கு கேக் ஊட்டும் பிரபல நடிகர்- வெளிவந்த புகைப்படம்
ஜுன் 22 தமிழகம் முழுவதும் ஒரே கொண்டாட்டம், ஆட்டம் பாட்டம் தான். காரணம் முன்னணி நடிகரான விஜய்யின் பிறந்தநாள் இன்று, அவர் இந்த ஸ்பெஷல் நாளில் என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை.
ஆனால் அவரது ரசிகர்கள் நிறைய விஷயங்கள் செய்கிறார்கள், அதாவது முதியவர்களுக்கு உதவுவது, இல்லங்களுக்கு உதவி செய்வது என நிறைய செய்கிறார்கள்.
பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விஜய்க்காக மனமார வாழ்த்து கூறி வருகிறார்கள்.
அதோடு விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் வம்சி இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இதுவரை 2 போஸ்டர்கள் வெளியாகிவிட்டது, மாலை 5 மணியளவில் 3வது போஸ்டர் ரிலீஸ் ஆக இருக்கிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்த நேரத்தில் விஜய்யின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. பீஸ்ட் படப்பிடிப்பில் விஜய்க்கு ஷைன் டாம் சாக்கோ கேக் ஊட்டுவது போல் புகைப்படம் உள்ளது, அதில் இயக்குனர் நெல்சன் திலீப்பும் உள்ளார்.

தமிழகத்தில் விஜய்யின் மாஸ்டர் பட ஷேர் மட்டும் இத்தனை கோடியா?- வெளிவந்த விவரம் 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    