விக்ரம் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் லோகேஷிடம் தளபதி விஜய் சொன்ன விஷயம் !
தளபதி 67
கோலிவுட் திரையுலகமே பெரியளவில் எதிர்பார்த்துள்ள திரைப்படம் தளபதி 67, வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள 67-வது திரைப்படத்தின் அறிவிப்பு கூட இன்னும் வெளியாகவில்லை.
ஆனால் அப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது, தொடர்ந்து ரசிகர்கள் படத்தின் அப்டேட்ஸ் கேட்டு வந்ததால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளத்திற்கு பிரேக் விட்டு அடுத்த திரைப்படத்தின் அப்டேட் உடன் சந்திப்பதாக பதிவிட்டு இருந்தார்.
அப்படியும் கூட அவர் செல்லும் இடம் எல்லாம் தளபதி 67 குறித்து தான் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தளபதி 67 குறித்து பேசியிருக்கிறார்.

விக்ரம் குறித்து விஜய்
அதில் “விஜய் சார்-க்கு விக்ரம் படம் மிகவும் பிடித்திருந்தது, அவர் என்னுடன் போனில் 2 மணி நேரம் பேசினார். அவர் இந்த Universe Concept-ல் இணைய தயாராக தான் இருக்கிறார்.
இந்த Universe கொண்டு வந்ததே ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் சந்திப்பது தான். நாங்கள் அனைத்தையும் இணைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். இப்போதைக்கு எங்களால் எதையும் கூறமுடியாது” என லோகேஷ் பேசியதாக தகவல் பரவி வருகிறது.
ஆனால் ஒரு சில ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியில் லோகேஷ் இது குறித்து எந்த் ஒரு விஷயத்தை பகிர் கொள்ளவில்லை என பதிவிட்டு வருகின்றனர்.

ராஷ்மிகாவுடன் நபர் ஒருவர் நேருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோ
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri