அஜித் படம் வெற்றியடைந்ததை விருந்து வைத்து கொண்டாடிய விஜய்.. அதுவும் யாருக்கு வைத்தார் தெரியுமா
விஜய் - அஜித்
தமிழ் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்.
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல் அஜித் நடிப்பில் சமீபத்தில் தான், வலிமை படம் வெளிவந்தது.

அஜித்துடைய நடிப்பில் இன்று வரை கொண்டாடக்கூடியு திரைப்படங்களில் ஒன்று மங்காத்தா.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த இப்படம் அஜித்துக்கு 50வது திரைப்படமாக அமைந்தது.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

மங்காத்தா வெற்றியை கொண்டாடிய விஜய்
இந்நிலையில் மங்காத்தா படத்தின் வெற்றிக்காக, இயக்குனர் வெங்கட் பிரபுவை தனது வீட்டிற்கு அழைத்து நடிகர் விஜய் விருந்து வைத்துள்ளார்.
இந்த விஷயத்தை சந்தோஷமாக பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யாவுடன் இணைகிறேனா? வைரலான செய்திக்கு STR தரப்பு சொன்ன விளக்கம்