மேடையில் நடனம் ஆடி அசத்திய நடிகர் விஜய்.. இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர். இப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கும் விஜய் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் துவங்கவுள்ளது. நடிகர் விஜய் நடனத்தில் மிகச்சிறந்தவர் என்பதை நாம் அறிவோம். அவருடைய நடனத்தை காணவே ரசிகர்கள் ஆவலுடன் படங்களை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
அன்ஸீன் வீடியோ
இந்நிலையில், நடிகர் விஜய் நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் இணைந்து மேடையில் நடனம் ஆடிய அன்ஸீன் வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதுவரை பலரும் பார்த்திராத விஜய்யின் அன்ஸீன் நடன வீடியோ இதோ..
Thalapathy Dance Step..❤️🥳🕺! @actorvijay pic.twitter.com/1DH85iGX97
— ⱽʲ மித்ரா🦋 (@jasmin_vj_) August 11, 2022