அட்லீயுடன் நடனமாடிய நடிகர் விஜய்.. இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ
விஜய் - அட்லீ
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் தெறி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் - அட்லீ கூட்டணியில் மெர்சல் வெளிவந்தது. பெரும் எதிர்ப்பையும் தாண்டி மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து பிகில் திரைப்படத்தில் மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடித்திருந்தார் விஜய். இப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. இயக்குனர் அட்லீ ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்தவர் என்பதை அனைவரும் அறிவோம்.
நண்பன் படத்தின் போது ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த அட்லீ, அந்த நேரத்தில் தான் விஜய்யுடன் நெருக்கமாக பழகி இருக்கிறார். இதனால் தான் இருவரும் இணைந்து இதுவரை மூன்று ஹிட் படங்களை கொடுத்துள்ளார்கள்.
வைரல் நடன வீடியோ
இந்நிலையில், நண்பன் படத்தின் வெற்றியை பார்ட்டி வைத்து படக்குழு கொண்டாடியுள்ளனர். அப்போது நடிகர்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்துடன் இணைந்து இயக்குனர் அட்லீயும் நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Happiest Birthday Mr.Iyakkams @Atlee_dir ❤️💐#HappyBirthdayAtlee#Varisu @actorvijay #Beastpic.twitter.com/7qvArCH72J
— TEAM THALAPATHY BLOODS (@TTB_Offl) September 21, 2022