சிலரின் பேச்சை கேட்டு முடிவெடுத்த விஜய்.. வாய்ப்பை இழந்து தவித்த இயக்குனர்
விஜய் - பேரரசு
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த சிவகாசி மற்றும் திருப்பாச்சி இரு திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது. இந்த இரு படத்தையும் பேரரசு இயக்கியிருந்தார்.
இந்த இரு திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து பேரரசின் தம்பி முத்து வடுகு நடிகர் விஜய்க்கு கதை சொல்லி ஓகே செய்துள்ளார்.
வாய்ப்பை இழந்த இயக்குனர்
பேரரசை தொடர்ந்து அவருடைய தம்பியுடடைய இயக்கத்திலும் விஜய் நடிக்கவிருந்த படம் தான் முரசு. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கும் போது, திடீரென யாரோ சிலர் விஜய்யிடம் சென்று பத்தவைத்துள்ளனர்.
'ஏற்கனவே இரு திரைப்படங்கள் பேரரசுக்கு பண்ணிடீங்க. இப்போ மறுபடியும் ஏன் அவருடைய தம்பிக்கு புதிய படத்தை கொடுத்துருக்கீங்க. தொடர்ந்து அவங்க குடும்ப படத்திலேயே நடிக்கிறீங்க. இப்போவே பேரரசு இல்லாம விஜய் இல்ல என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசுறாங்க' என்று கூறியுள்ளார்கள்.
இதனால் சில படங்களுக்கு பின் முத்து வடுகு இயக்கத்தில் நடிக்கலாம் என்று எண்ணி முரசு படத்தை ஒத்தி வைத்தாராம் விஜய். ஆனால், காலப்போக்கில் அப்படம் அதற்குப்பின் துவங்கவில்லை.
இதை குறித்து பேசிய பேரரசின் தம்பி முத்து வடுகு 'விஜய் படத்தை இயக்கம் வாய்ப்பை இழந்தேன்' என்று மட்டும் கூறியுள்ளார்.
சூர்யா-ஜோதிகாவின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- செம ஸ்மார்ட், லேட்டஸ்ட் க்ளிக் பாருங்க

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri
