தாய், தந்தை மற்றும் மனைவி சங்கீதாவுடன் விஜய் கொண்டாடிய தீபாவளி.. புகைப்படத்துடன் இதோ
விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது தளபதி 68 படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தில் முடித்துவிட்டு நேற்று தான் சென்னை திரும்பினார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி 68 படத்திற்குப்பின் விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
நடிகர் விஜய்யின் சொந்த வாழ்க்கை குறித்து பல விதமான வதந்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது. விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் இடையிலான பிரச்சனை குறித்து நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால், சமீபத்தில் அந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் விஜய் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளிவந்தது.
ஆனால், விஜய் - சங்கீதா குறித்து தொடர்ந்து பல விதமான வதந்திகள் பேசப்பட்டு வருகிறது. இதற்கும் விவரத்தில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
குடும்பத்துடன் தீபாவளி
இந்நிலையில், நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன் தனது தாய், தந்தை மற்றும் மனைவியுடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய சில அன்ஸீன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..