விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம் ஆகிவிட்டது.. உண்மையை போட்டுடைத்த நடிகை
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா காதல்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வந்த லைகர் படம் பெரிய பிளாப் ஆகிவிட்டது. அவரது அடுத்த படமும் ட்ராப் ஆகிவிட்டது, அதனால் விஜய் தேவரகொண்டா கடும் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது. சமூக வலைதளஞலில் கூட அவர் அதிகம் வருவதில்லை.
மேலும் அவர் நடிகை ராஷ்மிகா மந்தனாவை காதலிப்பதாக கூறப்படும் நிலையில் அவர்கள் அதை இதுவரை வெளிப்படையாகி ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் சமீபத்தில் ஜோடியாக மாலத்தீவுக்கும் டேட்டிங் சென்றனர்.

திருமணம் ஆகிவிட்டது
இந்நிலையில் ஸ்ரீதேவி மகளான பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் தேவரகொண்டாவு பற்றிய உண்மையை போட்டுடைத்து இருக்கிறார்.
"உங்கள் சுயம்வரத்திற்கு யார் எல்லா வரவேண்டும்" என தொகுப்பாளர் கேட்க ஹிரித்திக் ரோஷன், ரன்பீர் கபூர், டைகர் ஷ்ரோப் ஆகியோர் பெயரை கூறினார். திருமணம் ஆகாதவர்கள் பெயரை மட்டும் சொல்லுங்கள் என தொகுப்பாளர் சொல்ல ஜான்வி சற்று நேரம் யோசித்தார்.
விஜய் தேவரகொண்டா பெயரை தொகுப்பாளர் சொல்ல, 'அவர் practically married' என ஜான்வி கூறி நிராகரித்து இருக்கிறார்.
அதனால் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் கிட்டத்தட்ட திருமணம் ஆனவர்கள் போல வாழ்த்து வருகிறார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது.

எங்க கைவெச்சு தள்ளினான் தெரியுமா.. பிக்பாஸ் அஸீம் பற்றி தனலட்சுமி அதிர்ச்சி புகார்