"மிகுந்த மன வேதனை".. குவைத் நாட்டில் நடந்த விபத்து குறித்து பேசிய விஜய்!!
குவைத்
குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 12 அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் 49 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் பலரும் காயமடைந்து மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மன வேதனை!!
இந்நிலையில் நடிகரும், தி வெ க கட்சியின் தலைவருமான விஜய், குவைத் நாட்டில் நடந்த அடுக்குமாடி விபத்து தொடர்பாக பேசியுள்ளார்.
அதில், "குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்".
"உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
— TVK Vijay (@tvkvijayhq) June 13, 2024

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
