நடிகர் கார்த்தி பதிலால் செம கடுப்பான விஜய் ரசிகர்கள்- ஏன் தெரியுமா?
நடிகர்கள்
கோலிவுட்டில் நடிகர்கள் பஞ்சாயத்தை விட அவர்களுடைய ரசிகர்கள் பஞ்சாயத்து தான் எப்போதும் ஹாட் டாபிக்.
ஒரு நடிகர் குறித்து மற்றொரு நடிகர் பெரிதாக பேசக்கூட முடியவில்லை, அப்படி பேசினாலே பெரும் சர்ச்சையாக்கி விடுகின்றனர்.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அக்ஷ்யா மற்றும் பிராவோ வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா?
அதிலும் விஜய்-அஜித் ரசிகர்கள் பற்றி நமக்கே நன்றாக தெரியும், இவர்களை பற்றி ஏதாவது ஒரு விஷயம் பிரபலங்கள் ஏதாவது நெகட்டீவாக கூறிவிட்டால் எப்படி அவரை கூறலாம் என பெரிய பஞ்சாயத்தே வரும்.
இப்போது அப்படி ஒரு பிரபலம் சொன்ன சாதாரண விஷயம் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
கார்த்தி
நடிகர் கார்த்தி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று வந்த போது, எல்லோரும் சூழ்ந்துக்கொண்டு லியோ பார்த்துவிட்டீர்களா என கேட்டனர்.
கார்த்தி அதற்கு இல்லை என்று சொல்ல, உடனே விஜய் ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர். என்ன கைதி LCU-ல் தானே வருகிறது, நீங்களே லியோ பார்க்கவில்லையா என்று வழக்கம் போல் கார்த்தியை திட்ட ஆரம்பித்துவிட்டனர்.