பொன்னியின் செல்வன் படத்தில் விஜய்க்கு பிடித்த விஷயம் இதுதானாம்.. என்னவென்று தெரியுமா
பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ப்ரீ புக்கிங் தமிழ் சினிமா காண பல சாதனைகளை படைத்து வருகிறது.
விஜய்க்கு பிடித்த விஷயம்
இந்நிலையில், இப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இடம்பெறும் பொன்னி நதி பாடல் தான் தளபதி விஜய்க்கு மிகவும் பிடித்த ஒன்றாம். அந்த பாடலை தான் எப்போதும் முணுமுணுத்துக்கொண்டே இருப்பார் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
வாரிசு படத்தின் படப்பிடிப்பின் போது இதை சரத்குமார் தெரிந்துகொண்டதாக தெரியவந்துள்ளது. நடிகர் விஜய் எற்கனவே வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
