சங்கீதாவுடன் விவாகரத்து? நடிகையுடன் இரண்டாம் திருமணம்? அனைத்து சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்த விஜய்
விஜய்யை சுற்றி எழுந்த சர்ச்சைகள்
நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப்போவதாக கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
அதே போல் பிரபல நடிகையை நடிகர் விஜய் இரண்டாம் திருமணம் செய்யப்போவதாகவும் சர்ச்சை எழுந்தது. ஆனால், இதுகுறித்து விஜய் எந்த ஒரு இடத்திலும் பேசவில்லை.

முற்றுப்புள்ளி வைத்த விஜய்
இந்நிலையில், நேற்று மாணவர்கள் சந்திப்பில் இதுகுறித்து மறைமுகமாக பேசினார். மேடையில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்ட விஜய், "இந்த சமூக வலைத்தளத்தில் வரும் 75% சதவீதம் செய்திகள் பொய்யானதாக இருக்கிறது. நான் எல்லாரையும் சொல்லல, ஒருசில பேருக்கு கவர்ச்சிகரமான தகவலை வெளியிடுவதாக நினைத்து சிலவற்றை போலியாக வெளியிடுகிறார்கள்" என கூறினார்.

சங்கீதாவுடன் விவாகரத்து, நடிகையுடன் இரண்டாம் திருமணம், தந்தையை மதிக்காமல் இருக்கும் விஜய் என பல வதந்திகளுக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய் என பேசப்பட்டு வருகிறது.
மேடையில் சோர்ந்து டேபிள் மீது சாய்ந்த விஜய்.. தொடர்ந்து இத்தனை மணி நேரம் நின்றாரா?
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri