ஜோசப் விஜய் வீட்டு வாசலில் உள்ள விஷயம்.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விஜய்
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
வம்சி இயக்கி வரும் இப்படத்தின் நான்காம்கட்ட படப்பிடிப்பு தற்போது வைசாக்கில் நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் வெளியான சமையத்தில் மதம் சார்ந்த பல சர்ச்சைகளும், விமர்சனங்களுக்கும் தனிப்பட்ட முறையில் விஜய்யின் மேல் கூறப்பட்டது.
விமர்சனங்களுக்கு பதிலடி
அதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில மாதங்களுக்கு முன் பீஸ்ட் படத்திற்காக அவர் கொடுத்திருந்த பேட்டியில், இயேசு, பிள்ளையார், ஹல்லா என மூவரையும் நான் வணங்குவேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் விமர்சம் செய்த பலருக்கு சரியான பதிலடித்து கொடுத்துள்ளார். ஆம், தனது வீட்டின் வாசலில் பிள்ளையார், அம்மன் சிலையை வைத்துள்ளார் நடிகர் விஜய்.
இதை பார்த்த விஜய்யின் ரசிகர்கள் பலரும், இந்த புகைப்படத்தை பதிவு செய்து பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

