விஜய்யின் கோட் இதுவரை செய்துள்ள மொத்த வசூல், அதிகாரப்பூர்வ அறிவிப்பு..போட்றா வெடிய
விஜய்யின் கோட்
நாளை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினியின் வேட்டையன் படம் வெளியாக இருக்கிறது.
இப்படம் பாக்ஸ் ஆபிஸில் செய்யப்போகும் சாதனைகளை பார்த்த மக்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். இந்த படத்திற்கு முன் வெளியான பெரிய நடிகரின் படம் என்றால் விஜய்யின் கோட் தான்.
ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியாகி இருந்தது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன், சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன், த்ரிஷா என நடித்திருந்தனர்.
இப்படத்திற்காக விஜய் ரூ. 200 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
மொத்த வசூல்
கோட் படத்தை தயாரிக்க ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்ந்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டையை அறிவித்து வந்தனர்.
இந்த நிலையில் விஜய்யின் கோட் படம் இதுவரை மொத்தமாக ரூ. 455 கோடி வரை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Creating new records at the Box office #GOAT @actorvijay Sir @vp_offl @aishkalpathi @Ags_production @Jagadishbliss pic.twitter.com/AEJVtAF57s
— Archana Kalpathi (@archanakalpathi) October 9, 2024

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
