வாரிசு பட ப்ரோமோஷனுக்காக முதல்முறையாக நடிகர் விஜய் செய்யவுள்ள விஷயம்! சூப்பர் அப்டேட்
வாரிசு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

ப்ரோமோஷன்
இன்னும் சில மாதங்களில் வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. சண்டை மற்றும் ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே தற்போது தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல தேதிகளை ஒதுக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று தளபதி விஜய் படத்தை ப்ரோமோஷன் செய்ய இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

பிரமாண்டமாக கட்டியுள்ள புதிய வீட்டில் மனைவியுடன் குடிபோகும் தனுஷ்