தளபதி 68 படப்பிடிப்பிற்காக தாய்லாந்த் சென்ற விஜய்.. விமான நிலையத்தில் இருந்து வெளிவந்த புகைப்படம்
தளபதி 68
தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் தளபதி 68. வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்து வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மேலும் ஏ ஜி எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
விமான நிலையத்தில் விஜய்
முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் துவங்கியுள்ளது. லியோ படத்தின் வெற்றி விழாவை முடித்துவிட்டு நடிகர் விஜய்யும் தாய்லாந்த் புறப்பட்டு சென்றுள்ளார்.
விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..