விஜய்க்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள்.. தளபதி 68 படத்தின் கதைக்களம் இதுதானா, லேட்டஸ்ட் அப்டேட்
தளபதி 68
லியோ படத்திற்கு பின் விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தின் ஆடியோ ரைட் விற்பனை ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜெய் நடிக்கிறார் என ஏற்கனவே தெரிவித்திருந்தோம். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் இளம் நடிகை பிரியங்கா மோகன் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போகிறார் என நேற்றில் இருந்து பேசப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் அப்டேட்
இந்நிலையில் தற்போது இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோதிகாவும் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், இளம் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் மற்றும் சற்று வயதான விஜய் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஜோதிகாவும் நடிக்கவுள்ளார்கள் என கூறப்படுகிறது.

மேலும் அரசியல் கலந்த திரில்லர் கதைக்களம் கொண்டது தான் தளபதி 68 என தெரிவிக்கின்றனர். ஆனால், இவை யாவும் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸ்-க்கு என்ன ஆச்சு.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்