விஜய் பற்றிய கேள்வி.. கோபமாகி ரிப்போர்ட்டர் உடன் சண்டை போட்ட சரத்குமார்
விஜய்
நடிகர் விஜய் விரைவில் அரசியல் களத்தில் இறங்க இருக்கிறார், கட்சி தொடங்கி இன்னும் சில வருடங்களில் தேர்தலில் போட்டியிட இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
அதற்கு அடித்தளமாக தான் மாணவர்கள் நிகழ்ச்சியை அவர் சமீபத்தில் நடத்தி இருந்தார். அம்பேத்கர், காமராஜர், பெரியாரை படியுங்கள் என இளைஞர்களுக்கு விஜய் கொடுத்த அட்வைஸும் பரபரப்பாக பேசப்பட்டது.
கோபமான சரத்குமார்
இந்நிலையில் சமீபத்தில் போர் தொழில் படத்தில் வெற்றி விழா நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை நடிகர் சரத்குமார் சந்தித்து பேசினார். அவரிடம் 'விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன? அவருடன் கூட்டணி வைப்பீங்களா' என டிவி நிருபர் கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விக்கு நிருபருடன் சரத்குமார் வாக்குவாதம் செய்ய தொடங்கிவிட்டார். 'எல்லோரும் அரசியலுக்கு வர வேண்டும் என கூறிவிட்டேன். முதலில் அவர் என்னுடன் கூட்டணி வைக்க விருப்பபடணுமே.'
"நீங்க பத்திரிகையாளர் தானே, உங்க கருத்து என்ன. உங்க சேனல் முதலாளியிடம் முதலில் கருத்து கேட்டு சொல்லுங்க"
"உங்க கருத்தை முதல்ல சொல்லுங்க, அதை கேட்டுட்டு அப்புறம் நான் கருத்து சொல்றேன்" என கோபமாக வாக்குவாதம் செய்தார் சரத்குமார்.
நீ ஹீரோ.. நான் வில்லனா? பழனிச்சாமி உடன் சண்டைக்கு நின்ற கோபி! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
