விஜய் அடுத்து கூட்டணி சேரும் பிரபல தயாரிப்பு நிறுவனம்! உறுதி செய்த பிரபல நடிகர்
விஜய்
விஜய் வாரிசு படத்தை முடித்துவிட்டு தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி சேரும் தனது அடுத்த படத்தை தொடங்கி இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தான் இதன் பூஜை சென்னையில் இருக்கும் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் உடன் மீண்டும் கூட்டணி சேர்வதால் கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

விஜய் பற்றி ஜீவா சொன்ன தகவல்
இந்நிலையில் நடிகர் ஜீவா சமீபத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது அப்பாவின் சூப்பர் குட் பிலிம்ஸ் தற்போது 96 படங்களை தயாரித்து முடித்திருக்கிறது. "கண்டிப்பாக 100வது படத்தில் தளபதி விஜய் தான நடிப்பார். அது உறுதியாகி இருக்கிறது. இருப்பினும் இயக்குனர், இசையமைப்பாளர் யார் என்பது உறுதியாகவில்லை" என கூறி இருக்கிறார்.
ஜீவா தற்போது அவரது அப்பா ஆர்பி செளத்ரி தயாரிப்பில் நடித்து இருக்கும் வரலாறு முக்கியம் படம் வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதன் ப்ரோமோஷனுக்காக கொடுத்த பேட்டியில் தான் ஜீவா விஜய் உடன் நடக்கும் பேச்சுவார்த்தை பற்றி கூறி இருக்கிறார்.

விஜய் நாயகிகளை பார்த்து இவ்வளவு மோசமாக கூறினாரா?- ஏற்பட்ட பிரச்சனை
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu