பல வருடங்களுக்கு பிறகு நேர்காணலில் கலந்து கொள்ளும் தளபதி விஜய் ! மாஸ் தகவல்..
நோ ஆடியோ லான்ச்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.
மேலும் பீஸ்ட் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் தற்போது வரை அப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வரவில்லை.
நேர்காணலில் விஜய்
இதற்கிடையே நேற்று ரசிகர்கள் அனைவரையும் கலவையடைய செய்யும் வகையில் தகவல் வெளியானது.
ஆம் அதன்படி பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி இந்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பில்லை, என தகவல் பரவின.
இதனால் கவலையடைந்த ரசிகர்கள் தளபதி விஜய்யின் ஸ்பீச்-யை பார்க்கமுடியாது என கூறிவந்தனர்.
இந்நிலையில் தற்போது சன் டிவி நேர்காணலில் விஜய் பீஸ்ட் படக்குழுவுடன் கலந்து கொள்ள இருப்பதாகவும், அந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஒளிபரப்பாகும் என்றும் தகவல் வந்துள்ளது.
இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்..
9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய பதிவு..