10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசு கொடுக்கும் நடிகர் விஜய்..
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
நடிகர் விஜய் சமீபகாலமாக தனது மக்கள் இயக்கத்தின் மூலம் சில விஷயங்களை செய்து வருகிறார்.

சமீபத்தில் கூட அம்பேதகர் பிறந்தநாள் அன்று அவருடைய சிலைக்கு தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் மாலை அணிவித்தார்.
மாணவ, மாணவிகளுக்கு பரிசு
இந்நிலையில், இதை தொடர்ந்து 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து பரிசளிக்கவுள்ளாராம் நடிகர் விஜய்.

ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வருவார் என்பது போல் செய்திகள் உலா வரும் இந்த சமயத்தில், இப்படியொரு செய்தி வெளிவந்துள்ளது.
தன்னுடைய அரசியல் வருகைக்காக தான் விஜய் இப்படி செய்து வருகிறார் என பேச்சு எழுந்துள்ளது.
அச்சு அசல் விஜய் போலவே நடனமாடி அசத்திய ஜப்பான் நாட்டு ரசிகை.. வைரலாகும் வீடியோ
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri