சிவகார்திகேயனை விட நடிகர் விஜய் ரஜினியின் இவ்வளவு தீவிர ரசிகரா ! வைரலான பதிவு..
ரஜினியின் தீவிர ரசிகரான விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக தனது திரைப்படங்களுக்கு உலகளவில் வரவேற்பை பெற காரணமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.
அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அவரின் 169-வது திரைப்படமாக உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகியுள்ளதை கொண்டாடும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.
மேலும் திரையுலக நட்சத்திரங்கள் ரஜினியின் சிவாஜி திரைப்படம் குறித்த தங்களின் நினைவுகளை பகிர்ந்து வந்தனர். அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் சிவாஜி திரைப்படம் குறித்து பதிவிட்டு இருந்த அவர் அப்படத்தை திரையரங்கில் 15 முறைக்கு மேல் பார்த்ததாக பதிவிட்டு இருந்தார்.
இதனிடையே ரஜினியின் ரசிகர்கள் நடிகர் விஜய் அளித்திருந்த பழைய பேட்டியொன்றில் சிவாஜி திரைப்படத்தை அவர் திரையரங்கில அவர் 17 முறைக்கு மேல் பார்த்ததாக சொல்லியுள்ளார்.
இதனால் தற்போது ரஜினி ரசிகர்கள் விஜய், சிவகார்த்திகேயனை விட மிகவும் தீவிரமான ரஜினியின் ரசிகர் என பதிவிட்டு வருகின்றனர்.

கையில் குழந்தையுடன் தொகுப்பாளினி பிரியங்கா ! அவர் வீட்டில் நடந்த விஷேசம்..
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu