விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த கில்லி படத்தில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானா?

By Yathrika Mar 25, 2024 11:40 AM GMT
Report

கில்லி

தெலுங்கில் படு ஹிட்டடித்த ஒக்கடு படத்தின் ரீமேக்காக தமிழில் தரணி இயக்கிய திரைப்படம் கில்லி.

விஜய் வேலு என்கிற கதாபாத்திரத்தில் கபடி வீரனாக நடித்திருந்தார், அவருக்கு ஜோடியாக த்ரிஷா, தனலட்சுமி என்ற பெயரில் நடித்தார். வித்யாசாகர் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.

விஜய்யின் தலைவா படத்தில் நடித்த நடிகையா இது, ஆளே மாறிட்டாங்களே- லேட்டஸ்ட் க்ளிக்

விஜய்யின் தலைவா படத்தில் நடித்த நடிகையா இது, ஆளே மாறிட்டாங்களே- லேட்டஸ்ட் க்ளிக்

நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய முதல் படம் என்ற அங்கீகாரத்தை கில்லி படம் பெற்றது.

இந்த படத்தில் விஜய்யை தாண்டி வேறு எந்த ஒரு நடிகரையும் நம்மால் வைத்து பார்க்க முடியாது, அந்த அளவிற்கு விஜய் ரசிகர்கள் மனதில் வேலு கதாபாத்திரம் மூலம் பதிந்துவிட்டார்.

விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த கில்லி படத்தில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானா? | Vijay Is Not The First Choice For Ghilli Movie

முதல் சாய்ஸ்

தரணி கில்லி படத்திற்கு முன் விக்ரமை வைத்து தில், தூள் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.

இதனால் கில்லி படத்தில் நடிக்க வைக்க தரணி, விக்ரமை தான் முதலில் அணுகியுள்ளார், அதேபோல் நாயகியாக ஜோதிகாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம்.

ஆனால் இருவருமே வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் இதில் நடிக்க முடியாமல் போயுள்ளது. 

விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த கில்லி படத்தில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானா? | Vijay Is Not The First Choice For Ghilli Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US