ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்... சென்சார் குழுவிற்கு இப்படியொரு பிரச்சனையா?
ஜனநாயகன்
நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக ராஜ்ஜியம் செய்து வந்தவர். இதுவரை 69 படங்கள் நடித்துவிட்டார், கடைசியாக அவர் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் 2026, பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருக்க வேண்டியது.

எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெட்ச் என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் தான் இசை. கடந்த வருடம் படு பிரம்மாண்டமாக ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் மாஸாக நடந்தது.
அந்த கொண்டாட்டத்தோடு படத்தை பொங்கல் ஸ்பெஷலாக காணலாம் என ரசிகர்கள் சந்தோஷமாக இருக்க கடைசியில் படம் வெளியாகாமல் போனது.
சென்சார்
படம் தள்ளிப்போனதில் இருந்து இப்போது ரிலீஸ் ஆகும், அப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்களும் காத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

கடைசியாக படத்தை ரிவைசிங் கமிட்டி இன்று ஜனநாயகன் படத்தை பார்க்க உள்ளார்களாம், அடுத்து ரிலீஸ் தேதி வெளிவந்துவிடும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் தற்போது வந்த தகவல் என்னவென்றால் ரிவைசிங் கமிட்டி குழுவில் ஒரு உறுப்பினருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படம் இன்று ஸ்க்ரீனிங் இல்லையாம். அடுத்து எப்போது அவர்கள் படம் பார்ப்பார்கள் என தெரியவில்லை.