கடைசி படத்திற்காக விஜய் வாங்கவுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
விஜய்
தளபதி விஜய் தற்போது GOAT திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து நிலையில், விஜய்யின் அடுத்த படம் குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

முழுநேர அரசியலில் வரவிருக்கும் விஜய்யின் கடைசி படம் தளபதி 69 என கூறப்படுகிறது. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கப்போகிறார் என உறுதியாக சொல்லப்படும் நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
விஜய் சம்பளம்
இந்த நிலையில், தளபதி 69 படத்திற்காக விஜய் வாங்கவுள்ள சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் விஜய் இப்படத்திற்காக ரூ. 275 கோடி சம்பளமாக வாங்கவுள்ளார் என பிரபல சினிமா விமர்சகர் அபிஷேக் ராஜா கூறியுள்ளார். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்து தொடர்ந்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. தளபதி 69 திரைப்படம் கைவிடப்பட்டது என பேசப்பட்ட நிலையில், தற்போது அது வெறும் வதந்தி என தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தற்போது இப்படத்திற்காக விஜய் வாங்கவுள்ள சம்பளம் குறித்து திரை வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan