வெறித்தனமான லுக்கில் விஜய்.. லியோ படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த அன்ஸீன் புகைப்படம்
லியோ
இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்க தளபதி விஜய் இப்படத்தில் நடிக்கிறார். இந்த கூட்டணி மாஸ்டர் படத்திற்கு பின் லியோவில் இணைந்துள்ளனர்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், திரிஷா, மிஸ்கின், கவுதம் மேனன் என பலரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் பிசினஸ் ரூ. 434 கோடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் UKல் 40 நாட்களுக்கு முன்பே துவங்கியுள்ள லியோ படத்தின் 10000 டிக்கெட்கள் 24 மணி நேரத்தில் விற்பனை ஆகிவிட்டது என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
வெறித்தனமான லுக்
லியோ படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், லியோ படத்தின் படப்பிடிப்பில் இருந்து விஜய் லுக் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்..