அப்போ விஜய் நடிக்கமாட்டாரா.. கண்கலங்கும் குட்டி ரசிகர் - இதோ வீடியோ
விஜய்
நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி தமிழ் நாட்டில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது. அவருக்கு அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்று தன்னுடைய கட்சி பெயர் 'தமிழக வெற்றி கழகம்' என்பதை, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கையோடு, விஜய் வெளியிட்ட அறிக்கையில், "அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன்".
"என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்" என்று விஜய் அறிவித்து இருந்தார்.
வீடியோ
இந்நிலையில் விஜய் சினிமாவை விட்டு விலகுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல், சிறுவன் ஒருவன் தன்னுடைய அம்மாவிடம், " ஏன் விஜய் நடிக்கமாட்டாரு?" என்று கண்கலங்கி கேள்வி கேட்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது..
Even Thalapathy's Next Generation
— TD....❥ (@MiniiGirl__) February 2, 2024
Kids Fans Can't Accept His Decision, way Expressing Emotion And Love Towards our Thalapathy
"ஏன் நடிக்கமாட்டாரு" @actorvijay ?❤️#தமிழகவெற்றிகழகம்pic.twitter.com/6YujJAz1V8
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri