அஜித்திடம் விஜய்க்கு பிடித்த விஷயம் இதுதான், என்ன தெரியுமா
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

லியோ படத்திற்கு பின் அட்லீ இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது. அது உண்மையா இல்லை வெறும் வதந்திதான என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அஜித்திடம் பிடித்தது
நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன் வில்லு படத்தின் சமயத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய சமகால நடிகர்கள் பற்றியும், அவர்களிடம் தனக்கு என பிடிக்கும் என்பதை பற்றியும் விஜய் பேசியுள்ளார்.

இதில் விக்ரம், சூர்யா, சிம்பு என வரிசையாக கூறி வந்த விஜய், நடிகர் அஜித்திடம் தனக்கு பிடித்தது அவருடைய தன்னம்பிக்கை தான் என்று கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
மறைந்த நடிகர் விவேக் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா