பீஸ்ட் திரைப்படத்தை போல ஏப்ரல் மாதலில் வெளியான விஜய் படங்களின் நிலவரம்..
ஏப்ரலில் பீஸ்ட்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியாகியுள்ள பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இதனிடையே இன்று மாஸ் போஸ்டருடன் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிட் OR பிளாப்
மேலும் தற்போது இதே போல் ஏப்ரல் மாதத்தில் வெளியான தளபதி விஜய்யின் திரைப்படங்கள் குறித்த விவரத்தை தான் பார்க்கவுள்ளோம்.
1. மாண்புமிகு மாணவன் - 12 ஏப்ரல் 1996 (ஹிட்)
2. நினைத்தேன் வந்தாய் - 10 ஏப்ரல் 1998 (கமர்சியல் ஹிட்)
3. பத்ரி - 12 ஏப்ரல் 2001 (கமர்சியல் ஹிட்)
4. தமிழன் - 12 ஏப்ரல் 2002 (ஆவரேஜ்)
5. கில்லி - 17 ஏப்ரல் 2004 (பிளாக் பஸ்டர்)
6. சச்சின் - 14 ஏப்ரல் 2005 (ஆவரேஜ்)
7. சுறா - 30 ஏப்ரல் 2010 (பிளாப்)
8. தெறி - 14 ஏப்ரல் 2016 (பிளாக் பஸ்டர்)

நடிகர் விஜய்காக எழுதிய கடிதத்தை கொடுக்க முடியாததால் மூதாட்டி உருக்கம் !