கட்சி தொடங்கிய பின் புதிய அறிக்கை வெளியிட்டிருக்கும் விஜய்.. இதோ
விஜய்
சினிமாவில் கலக்கி வந்துக்கொண்டு இருந்த நடிகர் விஜய், தற்போது அரசியலில் கலக்கி வருகிறார்.
நேற்று அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில், திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் என்று அறிவித்து இருந்தார்.
ஒரு பக்கம் விஜய் அரசியலில் களமிறங்கியதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தாலும், சினிமா ரசிகர்கள் கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறார்கள்.

புதிய அறிக்கை
இந்நிலையில் விஜய், நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், " அனைவருக்கும் வணக்கம்.தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்.அன்புடன், விஜய்தமிழக வெற்றி கழகம் என்று தெரிவித்து இருக்கிறார்.
