லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்
விஜய்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜனநாயகன் திரைப்படம் வெளிவரவுள்ளது.
இப்படத்தை ஹெச். வினோத் இயக்க, கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறார்கள். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகிறது.
சுவாரசிய தகவல்
தற்போது, அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய் முன்பு பேட்டி ஒன்றில் பகிர்ந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " நான் படிப்பில் பெரிய அளவிற்கு சிறந்து விளங்கவில்லை. அதனால், திரைப்படங்களில் என்னை அறிமுகப்படுத்துமாறு என் தந்தையிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன்.
ஆனால் அவர் முடியாது என்று கூறிவிட்டார், இதனால் வீட்டை விட்டு போவது போன்று பில்ட்-அப் கொடுத்து விட்டு உதயம் தியேட்டரில் படம் பார்க்க சென்று விட்டேன்.
இரண்டு மணி நேரத்தில் திரும்பி வரும் திட்டம் இருந்தது. ஆனால், படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நான் உதயம் தியேட்டரில் இருப்பதை என் தந்தை கண்டுபிடித்து அங்கு வந்து என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்" என்று தெரிவித்துள்ளார்.