அம்மாவுடன் நடிகர் விஜய் இருக்கும் போட்டோ வைரல்.. திடீர் சந்திப்பு இதற்காகத்தானா?
விஜய்
நடிகர் விஜய் கோலிவுட்டில் டாப் ஹீரோ. நூறு கோடிக்கும் மேல் ஒரு படத்திற்கு சம்பளம் வாங்கும் அளவுக்கு உச்சத்தில் இருக்கிறார். அவரது விஜய் மக்கள் இயக்கம் மூலமாக விரைவில் அவர் அரசியலிலும் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இது ஒருபக்கம் இருக்க, விஜய் அவரது அப்பா எஸ்ஏசி உடன் பேச்சுவார்த்தியில் இல்லை என நீண்ட காலமாகவே கூறப்பட்டது வருகிறது. அதனால் எஸ்ஏசி - ஷோபா இருவரும் தனியாகவே பிறந்தநாள் கொண்டாடியது, கோவிலில் நடந்த சதாபிஷேக நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொள்ளாததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
அம்மாவுடன் விஜய் - போட்டோ வைரல்
இந்நிலையில் தற்போது விஜய் அவரது அம்மா ஷோபா உடன் மட்டும் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
அப்பா - அம்மாவின் 50ம் ஆண்டு திருமண நாளை கொண்டாட தான் விஜய் அங்கு சென்று இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.