விஜய் பிறந்தநாள் அன்று வெளிவரும் ப்ளாக் பஸ்டர் திரைப்படம்.. காத்திருக்கும் ரசிகர்கள்
விஜய்
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. விஜய்யின் காட்சிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது.
விஜய் தற்போது USA-வில் தனது விடுமுறையை கொண்டாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படும் தளபதி 69 குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

ஹெச். வினோத் தான் இப்படத்தின் இயக்குனர் என கூறப்பட்டு வரும் நிலையில், இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ரீ-ரிலீஸாகி வசூலில் பட்டையை கிளப்பியது கில்லி. உலகளவில் ரீ-ரிலீஸில் மட்டுமே ரூ. 25 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.
ரீ-ரிலீஸ்
இந்த நிலையில், வருகிற ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று ப்ளாக் பஸ்டர் போக்கிரி திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri