பீஸ்ட் ட்ரோல்கள் பார்த்துவிட்டு விஜய் இப்படி சொன்னார்.. நெல்சன் உருக்கம்
பீஸ்ட்
விஜய் - நெல்சன் கூட்டணியில் பீஸ்ட் படம் கடந்த வருடம் ஏப்ரலில் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் நெகடிவ் விமர்சனம் தான் கொடுத்தனர். அதனால் சமூக வலைத்தளங்களில் ட்ரோல்களும் அதிகம் வந்தது.
நெகட்டிவிட்டி அதிகம் இருந்தாலும் வசூல் நன்றாக தான் இருந்தது என சன் பிக்சர்ஸ் கூறியதால் அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக ரஜினியே கூறி இருந்தார்.
மேலும் பீஸ்ட் படத்தால் வந்த நெகட்டிவிட்டியை ஒரு நாள் கூட ரஜினி ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னிடம் காட்டவில்லை என நெல்சனும் கூறி இருந்தார்.
விஜய் ரியாக்ஷன்
பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என்றதும் விஜய் ஒரு விஷயத்தை சொன்னாராம். 'படம் எடுத்தோம், சில பேருக்கு பிடித்தது, சில பேருக்கு பிடிக்கவில்லை. Genuine ஆக உழைப்பை கொடுத்தோம்.அவ்வளவு தான் முடிந்துவிட்டது. அடுத்த முறை வேற மாதிரி பண்ணிக்கலாம்' என கூறினாராம்.
மேலும் என் மீது கோபமாக இருக்கீங்களா என நெல்சன் கேட்க 'உனக்கும் எனக்கும் இருக்கும் பழக்கம் ஒரு படம் மட்டும் தானா. இப்படி கேட்டது ரொம்ப கஷ்டமா இருக்கு' என விஜய் கூறினாராம்.
சூர்யா தவறவிட்ட படத்தில் நடித்த விஜய்!.. அதுவும் சூப்பர் ஹிட் திரைப்படம்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
