வாரிசு பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு மாஸ்ஸாக சென்னை திரும்பிய தளபதி விஜய்! வைரல் வீடியோ
வாரிசு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் ஏகப்பட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் ஜனவரி மாதம் பொங்கல் அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோஸ் இணையத்தில் கசிந்து வருவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் நேற்று கூட விஜய் மற்றும் ராஷ்மிகா நடித்துள்ள ஒரு பாட்டின் புகைப்படம் இணையத்தில் கசிந்தது.

ஷூட்டிங்
இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. மேலும் தற்போது அதனை முடித்துவிட்டு தளபதி விஜய் சென்னைக்கு திரும்பி இருக்கிறார்.
ஆம், அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் மாஸ்ஸாக நடந்து வரும் வீடியோ தான் இணையத்தில் பரவி வருகிறது.
The Boss Returns ??#Varisu @actorvijay pic.twitter.com/Gcmi75AGLG
— Namakkal OTFC (@Namakkal_OTFC) August 24, 2022
தளபதி விஜய் மற்றும் ஷாருக் கான் இடையே நடந்த சந்திப்பு