லியோ
விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு லியோ என தலைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று மாலை ரிலீஸ் ஆன ப்ரோமோ வீடியோ தான் தற்போது வரை இணையத்தில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது.
அந்த ப்ரோமோ 24 மணி நேரத்தில் 27 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்து இருக்கிறது.

திரிஷாவுக்கும் 67 ஸ்பெஷல்
இந்த படம் விஜய்க்கு 67வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. டைட்டில் அறிவிக்கும் முன்பு வரை இந்த படத்தை தளபதி67 என்று தான் எல்லோரும் அழைத்து வந்தார்கள். ஆனால் திரிஷாவுக்கு இது 67வது படம் தானாம்.
கில்லி படத்திற்கு பிறகு நீண்ட வருடங்கள் கழித்து த்ரிஷா விஜய்க்கு ஜோடி ஆகி இருக்கும் நிலையில் தற்போது ரசிகர்கள் 67வது பட விஷயத்தை கண்டுபிடித்து வைரலாக்கி வருகின்றனர்.

ரத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்த வாணி ஜெயராம்- பரபரப்பு தகவல் கூறிய பணிப்பெண்