விஜய் அரசியலுக்கு வருவாரா..இல்லையா? - விஜயின் தாயார் பேட்டி
தளபதி விஜய்
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடித்துள்ள வாரிசு திரைப்படம் 2023 -ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் ஆடியோ லான்ச் கடந்த டிசம்பர் -24 நடைபெற்றது.
விஜய் நடித்த படங்களிலும், நிகழ்ச்சிகளிலும் மறைமுகமாக அரசியல் பற்றி பேசி வருகிறார் என பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் விஜயின் தந்தை மற்றும் பிரபல இயக்குனருமான சந்திரசேகர், விஜயின் பெயரில் ஒரு கட்சி ஒன்றை ஆரம்பித்தார்.
இதைதொடரந்து, "என் தந்தை ஆரம்பித்த கட்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்று அறிவித்தார் விஜய்.
அரசியல் வருகை
சமீபத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார் விஜயின் தாயார் ஷோபனா. தரிசனம் செய்த பிறகு பேட்டி அளித்த அவர், " அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என பிராத்தனை செய்தேன்" என்று கூறினார்.
பின்னர் அவரிடம், விஜய் அரசியல் வருகையை பற்றி கேள்வி எழுப்பினார்கள். அதற்க்கு அவர், "விஜய் அரசியல் வருவதை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. அது அவர் கையிலும் , கடவுள் கையிலும் தான் இருக்கிறது" என்று பதில் அளித்தார் .
விக்ரம் இல்லை.. சேது படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகரா - யார் தெரியுமா