கணக்கு போட்ட கமல் ஹாசன்.. தவிடுபொடியாக்கிய விஜய்.. என்ன நடந்தது
தளபதி 67
விஜய் அடுத்ததாக தளபதி 67ல் நடித்து வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த நிலையில், அடுத்தடுத்து படத்தில் நடிக்கும் பிரபலங்களின் அறிவிப்பும் வெளிவந்துகொண்டே இருக்கிறது.
அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், மிஸ்கின், சாண்டி, மேத்திவ் தாமஸ் உள்ளிட்டோரின் அறிவிப்பு வெளிவந்த நிலையில், இதுவரை திரிஷா On Board எனும் அறிவிப்பு வெளியாகவில்லை.
கமல் - விஜய்
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து கமல் ஹாசன் நடிக்கிறார் என்பது போல் ஏற்கனவே தகவல் வெளிவந்தது. ஆனால், தற்போது இந்த நிலைமை மாறியுள்ளது என தெரியவந்துள்ளது.
தப்பான கணக்கு
ஆம், கமல் ஹாசன் விஜய்யின் 67 படத்தில் நடிக்கவில்லையாம். தளபதி 67 படத்தில் நடிப்பதன் மூலம் விஜய்யின் கால்ஷீட்டை தன்னுடைய ராஜ் கமல் நிறுவனத்திற்காக வாங்கலாம் என திட்டமிட்டு கணக்கு போட்டு வைத்திருந்தாராம் கமல்.
ஆனால், விஜய் அதற்க்கு செவி சாய்க்காத காரணத்தினால் தளபதி 67ல் நடிக்கும் முடிவை கமல் மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. கமல் ஹாசன் போட்ட கணக்கு விஜய்யிடம் செல்லவில்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
அட்லீ - ப்ரியா ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு! பிரபலங்கள் வாழ்த்து மழை

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu
