இதுவரை இல்லாத அளவிற்கு பல கோடியில் சம்பளம் வாங்கிய விஜய்.. எவ்வளவு தெரியுமா
தளபதி விஜய்
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது.
இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 67. இப்படத்தை முடித்த பின் தளபதி 68 படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் இருந்தது.
இதற்கான பதிலாக அட்லீ தான் தளபதி 67 படத்தை இயக்க போகிறார் என்ற தகவல் வெளியானது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ரூ. 400 கோடி பட்ஜெட் என்றும் இப்படத்திற்காக இயக்குனர் அட்லீ ரூ. 50 கோடி சம்பளமாக வாங்கவுள்ளார் என்றும் முன் வந்த செய்திகளில் பார்த்திருந்தோம்.
விஜய்யின் சம்பளம்
இந்நிலையில், கதாநாயகனாக நடிக்கவிருக்கும் விஜய் இப்படத்திற்காக ரூ. 150 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 68 படத்திற்காக இதுவரை எந்த படத்திற்கும் வாங்காத சம்பளத்தை விஜய் வாங்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட் நடிகரின் பாணியில் தளபதி விஜய்.. தளபதி 67 படத்தில் இப்படியொரு விஷயமா