விஷ்ணு படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம்.. தயாரிப்பாளர் கூறிய தகவல்
நடிகர் விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. அதே போல் அவருடைய கடைசி படத்திற்காக ரூ. 250 கோடி சம்பளம் வாங்கப்போகிறார் என தகவல் வெளியாகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.
விஜய் சம்பளம்
இந்த நிலையில், விஜய் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விஷ்ணு. இப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதன்படி, "விஜய்யை வைத்து விஷ்ணு படத்தை தயாரித்தபோது, அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சார் இடம் எவ்வளவு சம்பளம் வேண்டும் என கேட்டோம். அவர் நீங்கள் என்ன கொடுத்தாலும் ஓகே என கூறிவிட்டார். நாங்கள் இப்படத்திற்காக விஜய்க்கு ரூ. 3 லட்சம் சம்பளமாக கொடுத்தோம்" என கூறினார்.
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri