தலைவா படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68.
வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் யுவன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் நடிப்பில் உருவாகி மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பையும், அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை சந்தித்த திரைப்படம் தலைவா.
ஏ. எல் விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால், சந்தானம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் சில அரசியல் ரீதியான பிரச்சனைகளை சந்தித்த காரணத்தினால் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளிரவிருந்த இப்படம் 10 நாட்களுக்கு பின் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளிவந்தது.
சம்பளம்
இந்நிலையில், இப்படி மாபெரும் சவால்களை சந்தித்து திரைக்கு வந்த தலைவா படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா இந்த தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தாரா?- வெளிவந்த விவரம்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
