விஜயின் ஸ்பெஷலான இந்த விஷயம் தளபதி 66 படத்தில் இருக்காதாம் ! அதிர்ச்சி தகவல்..

By Jeeva Apr 27, 2022 12:20 PM GMT
Report

பிஸியான விஜய்  

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

அதன்படி கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தமிழ்நாட்டில் பெரிய வசூல் சாதனை படைத்தது.

இதனிடையே பீஸ்ட் படத்தை முடித்தவுடன் விஜய் அவரின் தளபதி 66 படத்தில் பிஸியாகிவிட்டார், இப்படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதெராபாத் என வெவ்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

மேலும் சமீபத்தில் இப்படத்தில் நடிகர் ஷாம் நடிப்பதாக தகவல் ஒன்று இணையத்தில் பரவி வந்தது, அதனை நடிகர் ஷாமே அவரின் சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.

விஜயின் ஸ்பெஷலான இந்த விஷயம் தளபதி 66 படத்தில் இருக்காதாம் ! அதிர்ச்சி தகவல்.. | Vijay Sequence Will Be Opted From Thalapathy 66

தளபதி 66-ல் முடிவு செய்யப்படாத மாஸ்டர்கள் 

இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த மேலும் ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆம் அதன்படி இப்படத்தில் சண்டை காட்சிகளே இருக்காதாம்.

எமோஷனல் ட்ராமாவாக உருவாகி வரும் இப்படத்தில் இயக்குனர் வம்சி சண்டை காட்சிகளே வேண்டாம் என முடிவு செய்துவிட்டாராம்.

அதுமட்டுமின்றி இப்படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஸ்டண்ட் மாஸ்டர் குறித்து அறிவிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.  

விஜயின் ஸ்பெஷலான இந்த விஷயம் தளபதி 66 படத்தில் இருக்காதாம் ! அதிர்ச்சி தகவல்.. | Vijay Sequence Will Be Opted From Thalapathy 66

இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த படம் வலிமையா? பீஸ்ட்டா?- சினிமா பிரபலம் ஓபன் டாக்


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US