என் மகன் சிம்பு ரசிகன் என்பான், நான் அதற்கு... ஓபனாக கூறிய விஜய் சேதுபதி
பிக்பாஸ் 9
பிக்பாஸ், கடந்த சில நாட்களாகவே சின்னத்திரையில் இந்த நிகழ்ச்சி குறித்து தான் அதிக பேச்சு.
இவர் போட்டியாளர், அவர் போட்டியாளர், இப்போது நிகழ்ச்சி ஆரம்பம் என நிறைய கன்டென்ட் வந்துவிட்டது. அந்த பேச்சுகள் நேற்று (அக்டோபர் 5) முடிந்துவிட்டது, நிகழ்ச்சி தொடங்கி போட்டியாளர்கள் யார் யார் என்பதும் தெரிய வந்துவிட்டது.
இப்போது என்ன, 100 நாட்கள் நிகழ்ச்சியில் நடப்பவை பார்த்து அனைவரும் தங்களது விமர்சனத்தை வைக்கப்போகிறார்கள்.
விஜய் சேதுபதி
பிக்பாஸ் 9 ஆரம்ப நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக சென்றது. வீட்டிற்குள் நுழைந்த போட்டியாளர்களுக்கு முதல் நாளே ஷாக் தான், ஆரம்பமே டாஸ்க்குகளுடன் தொடங்கிவிட்டது, கூடவே சண்டையும் தொடங்கிவிட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தனது மகன் குறித்து பேசியிருந்தார். அதில் அவர், என் மகன் நான் ஒரு சிம்பு ரசிகன் என்பான், என்னடா வீட்லயே ஒரு நடிகன் இருக்கேன் எனக்கு ஒரு மரியாதை வேண்டாம் என கலகலப்பாக பேசியுள்ளார்.