உங்கள் கேள்வியே தவறானது.. கடுப்பான விஜய் சேதுபதி
மெரி கிறிஸ்துமஸ்
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மெரி கிறிஸ்துமஸ். இப்படம் வரும் ஜனவரி 12ம் தேதி தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தில் கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, காயத்ரி மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

கடுப்பான விஜய் சேதுபதி
சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், தமிழ் ஹிந்தி தெரியாது போடா என்று சொல்கிறர்கள். நீங்கள் மட்டும் ஏன் ஹிந்தி படங்களில் நடித்து வருகின்றனர் என்று கேள்வி கேட்டார்.
இதற்கு கடுப்பான விஜய் சேதுபதி, நடிகர் ஆமிர்கான் வந்தபோது கூட இந்தி தொடர்பான கேள்வியை கேட்டீர்கள்ள். அந்த மாதிரியான கேள்வி எதற்கு என்பது எனக்குப் புரியவில்லை. இப்படி என்னிடமும் கேட்காதிர்கள்.ஹிந்தி மொழியை திணிக்கக் கூடாது என்று தான் சொன்னார்கள். இந்தி படிக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை என்று விஜய் சேதுபதி பதில் அளித்தார்.

லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri