புதிய படத்திற்கு நியூ லுக்கிற்கு மாறிய நடிகர் விஜய் சேதுபதி- வைரலாகும் போட்டோ
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி இந்த பெயருக்கு பின்னால் நிறைய உழைப்பு உள்ளது. சின்ன சின்ன படங்களில் நடிகரின் பின்னால் நடித்து இப்போது முக்கிய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.
அண்மையில் இவர் ஷாருக்கானுடன் ஜவான் என்ற படத்தில் நடித்து பாலிவுட்டிலும் நல்ல ரீச் பெற்றார். தற்போது மெர்ரி கிறிஸ்துமஸ், விடுதலை 2, மகாராஜா, காந்தி டாக்ஸ், பிசாசு 2 உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
புதிய லுக்
விஜய் சேதுபதி, மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது விஜய் சேதுபதி, மிஷ்கின் இயக்கத்திலேயே புதிய படத்தில் ஹிரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் விஜய்சேதுபதியின் புதிய கெட்டப் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.