80 கோடி சம்பளம் எல்லாம் பொய்யா? விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்கவே இல்லையாம்
விஜய் சேதுபதி அடுத்து நடிக்க இருக்கும் படங்கள் பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வரும் நிலையில் அவரை பற்றி சமீபத்தில் ஒரு தகவல் பரவியது.
தெலுங்கில் புஷ்பா 2, பாலகிருஷ்ணாவின் அடுத்த படம் மற்றும் ஷாருக் கானின் ஜவான் ஆகிய படங்களில் வில்லனாக நடிக்கிறார் என்றும், அந்த மூன்று படங்களுக்காக சுமார் 80 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறார் என்றும் செய்தி வெளியானது.
புஷ்பா 2ல் நடிக்கவில்லை
இந்நிலையில் விஜய் சேதுபதியின் செய்தி தொடர்பாளர் தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார். "விஜய் சேதுபதி தற்போது ஷாருக் கானின் ஜவான் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார், அவர் வேறு எந்த தெலுங்கு படத்திலும் வில்லனாக நடிக்கவில்லை" என தெரிவித்து இருக்கிறார்.
அதனால் விஜய் சேதுபதி புஷ்பா 2ல் நடிக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
டிடி-யா இது? இப்படி ஒரு உடையில் அடையாளமே தெரியலையேhttps://cineulagam.com/article/dhivyadarshini-dd-latest-photoshoot-still-1660482037