விஜய் சேதுபதி இல்லை, விக்ரம் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?
சமீபத்தில் ரிலீஸ் ஆன விக்ரம் படம் தற்போது வசூல் சாதனைகள் படைத்து வருகிறது. வார நாட்களிலும் ஹவுஸ்ஃபுல் ஆக தான் படத்தின் பல காட்சிகள் ஓடுகிறது என்பதால் விக்ரம் படத்தின் வசூல் தற்போதைக்கு குறைய வாய்ப்பு இல்லை என்றும் சொல்லலாம்.
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் ரோல் அதிகம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. பாடி லாங்குவேஜை மாற்றி இதுவரை பார்க்காத ஒரு விஜய் சேதுபதியின் நடிப்பை இந்த படத்தில் பாரத்ததாக ரசிகர்கள் பலரும் கூறி இருக்கின்றனர்.
இந்நிலையில் விக்ரம் படத்தில் முதலில் அந்த ரோலில் பிரபுதேவா அல்லது ராகவா லாரன்ஸை நடிக்க வைக்க தான் படக்குழுவினர் நினைத்தார்களாம். ஆனால் அதற்கு பிறகு இறுதியில் விஜய் சேதுபதி அந்த ரோலுக்கு தேர்வாகி இருக்கிறார்.

தலைவர் 169 படத்தின் புரளிகளுக்கு முற்றுப்புள்ளி ! புதிதாக படத்தில் இணையும் டாப் நடிகர்..