பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கப்போவது படத்தின் நாயகி இவரா?.. அஜித் பட நாயகியா?
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, கடைசியாக இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் மகாராஜா என்ற படம் வெளியாகி இருந்தது.
சீனாவிலும் வெளியான இப்படத்திற்கு செம வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்கு பிறகு பிக்பாஸில் கவனம் செலுத்தியவர் இப்போது படங்களில் பிஸியாக விட்டார்.
ட்ரெயின் மற்றும் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் ஆகியவற்றில் விஜய் சேதுபதி நடித்து வர சமீபத்தில் அவரின் புதிய பட தகவலும் வெளியானது.

நாயகி
உகாதி பண்டிகையை முன்னிட்டு பூரி ஜெகன்நாத்-விஜய் சேதுபதி கூட்டணி படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இப்பட படப்பிடிப்பு ஜுன் மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
தற்போது இந்த படம் குறித்து என்ன தகவல் என்றால் அதில் நாயகியாக நடிக்க நடிகை தபு தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    