முகம் அப்படி இருக்கு.. கமல் படத்தில் இருந்து நிராகரிக்கப்பட்ட விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் ரோல்களில் மிரட்டி வருகிறார். ஹிந்தியில் ஜவான் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி அடுத்து அல்லு அர்ஜுனின் புஷ்பா 3 படத்தில் வில்லனாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
மது போதையில் விமான நிலையத்தில் ரகளை செய்த பாடகரும், பிக்பாஸ் பிரபலமுமான வேல்முருகன்- பரபரப்பு வீடியோ
கமல் படத்தில் நிராகரிப்பு
விஜய் சேதுபதி இளம் வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்தாராம். 11ம் வகுப்பு படிக்கும் போது கமல்ஹாசனின் நம்மவர் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடிக்க சென்றிருக்கிறார்.
அது கல்லூரி மாணவர் ரோல், ஆனால் விஜய் சேதுபதி முகம் பார்க்க குழந்தை போல இருக்கிறது என சொல்லி நிராகரித்துவிட்டார்களாம்.
இந்த தகவலை விஜய் சேதுபதியே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். விஜய் சேதுபதி கமலின் விக்ரம் படத்தில் வில்லனாக அதன் பின் நடித்தது குறிப்பிடத்தக்கது.