மீண்டும் சூப்பர் ஹிட் கூட்டணியுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி..? இந்த முறையும் வெற்றி கிடைக்குமா
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று அழைக்க படும் விஜய் சேதுபதி முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் எந்த கதாபாத்திரம் என்றாலும் தன்னுடைய சிறந்த நடிப்பினால் மக்களை கவர்ந்துவிடுகிறார். விஜய் சேதுபதி பணத்திற்காக படம் நடிக்காமல் வளர்ந்து வரும் இயக்குனரை தூக்கி விடும் நோக்கில் படம் நடிப்பவர்.

அப்படித்தான் "போடா போடி" படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் நீண்ட காலமாக "நானும் ரவுடி தான்" கதையை கையில் வைத்து கொண்டு வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தபோது விஜய் சேதுபதி தான் விக்னேஷ் சிவனுக்கு அந்த படத்தை நடித்து கொடுத்தார்.
அப்படம் சூப்பர் ஹிட்டாக அதன்பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சூப்பர் ஹிட் கூட்டணி
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் நடிகர் அஜித் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால், அந்த வாய்ப்பை அதன்பின் விக்கி கைநழுவி போனது.
இதன்பின், பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் படத்தை இயக்கப் போகிறார் என கூறப்பட்டு வந்தது. ஆனால், இது குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.

இந்நிலையில் மீண்டும் விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி அமைக்கப் போவதாக கூறுகின்றனர். அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது.
இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை தமன்னாவா இது? பள்ளிபருவத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறாரே!